அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

வாருங்கள் சத்திய மார்க்கத்தில் நுழைவோம். அன்புடன் வரவேற்கிறோம். முஹம்மது ஜுபைர் சிராஜி கணியூரீ

புதன், 3 ஜூன், 2015

நெஞ்சில் கை கட்டுதல் தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானதா?


நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல் வழங்கி இருந்தார் சகோதரர் ஒருவர். அது குறித்து சற்று விரிவாக நோக்குவோம்.

நெஞ்சில் கை கட்டுதல் தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானதா?

http://onlinepj.com இல் இருந்து சகோதரர் copy & paste செய்து இருந்தார், இதுவெல்லாம் அரபி மூலம் தெரியாத மக்களை ஏமாற்றும் வார்த்தை ஜாலங்கள்,  

இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் பதிவு செய்துள்ள இமாம் அஹமது அவர்களே இந்த அறிவிப்பாளரை குறைவு படுத்தி இருக்க இந்த ஹதீஸைஸஹிஹ் என்று எப்பிடி சொல்ல முடியும், சிந்தியுங்கள்
حدثنا يحيى بن سعيد عن سفيان حدثني سماك عن قبيصة بن هلب عن ابيه قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره – رواه احمد
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களை வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பும்
போது பார்த்தேன்,(தொழுகையில்) நெஞ்சின் மீது
இக்கையை வைப்பதையும் பார்த்தேன்,
அறிவிப்பாளர் – ஹுல்ப் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அஹ்மத்- எண் : 20961
இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் என்பவர்
வருகிறார்.இவரைப் பற்றி ஹதீஃத் கலை வல்லுனர்கள்
பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்,நம்பகமானவரென்று
நிறையை மட்டுமே கூறியவர்களுமுண்டு, இவ்வாறு
கூறியவர்கள் எண்ணிக்கையில் மிகமிக சொற்பமானவர்கள்,
இவருடைய குறை-நிறை இரண்டையும் கூறியவர்களும்
இருக்கிறார்கள்,இவர்களும் குறைந்த எண்ணிக்கையில்
உள்ளவர்களே,சிமாக் பலவீனவர்,அவருடைய ஹதீஃதை
ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறைமட்டுமே சொன்ன
ஹதீஃத் கலை அறிஞர்கள்தான் ஏராளம்,
நிறை கண்டோர்
1- قال ابوحاتم صدوق ثقة
1. சிமாக் உண்மையாளர்,நம்பத்தகுந்தவர் -அபூஹாதிம்
ரஹ்மத்துல்லாஹி அலைஹி
குறை நிறை கண்டோர்
1- قال يعقوب بن شيبة قلت لابن المديني رواية سماك عن عكرمة فقال مضطربة
1. இக்ரிமா வழியாக சிமாக் அறிவிப்பது தடுமாற்ற
முள்ளதாகும்.
இப்னுல் மதீனீ  ரஹ்மத்துல்லாஹி அலைஹி
2- قال يعقوب وروايته عن عكرمة خاصة مضطربة وهو في غير عكرمة صالح وليس من المتثبتين
2. இக்ரிமா வழியாக சிமாக் அறிவித்த ஹதீஃத் மட்டுமே
தடுமாற்றத்திற்குரியது.மற்றவர் வழியாக அவர்
அறிவித்தவை நல்லவை.ஆனால் சிமாக் உறுதியான
நிலைப்பாட்டுக்குரியவரல்ல.
-  யாகூப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
3- قال العجلي بكري جائز الحديث الا انه كان فى حديث عكرمة ربما وصل الشيئ
3. சிமாக் அறிவிக்கும் ஹதீஃதை ஏற்று கொள்ளலாம்.ஆனால்
இக்ரிமா வழியாக அவர் அறிவிப்பதை ஒப்புக்கொள்ளக்
கூடாது.காரணம், இக்ரிமா கூறியதை (இப்னு அப்பாஸ்
ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள்) சொன்னதாக
அறிவித்துவிடுவார்.
 இஜ்லீ பக்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி
4- قال النسائي ليس به بأس وفي حديثة شيئ
4. சிமாக் என்பவர் பரவாயில்லை என்று சொல்லத்தக்கவரே.
அவர் அறிவிக்கும் ஹதீஃதில் பலவீனமுண்டு.
- நசாயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி
5- قال ابن عدي احاديثه حسان وهو صدوق لابأس به
5. சிமாக் அறிவிக்கும் ஹதீஃத்கள் அழகானவை.ஆனால்
அவர் பரவாயில்லை என சொல்லத்தக்க உண்மையாளர்.
இப்னு அதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி
6- قال ابن ابي خثيمة سمعت ابن معين سئل عنه ماالذي عابه قال اسند الاحاديث لم يسندها غيره وهو ثقة
6. சிமாக் நம்பகமானவர்.ஆனால் யாருமே அறிவித்திராத
நபரின் வழியாகவெல்லாம் ஹதீஃதை அறிவிக்கும் குறைபாடு
இவரிடமுண்டு.
இப்னு மஈன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
குறை கண்டோர்
1- قال ابوطالب عن احمد مضطرب الحديث
1. சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தடுமாற்றமுடையவர்.
அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
2- قال ابن عمار يقولون انه كان يغلط ويختلفون في حديثه
2. சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தவறிழைப்பார்.அவர்
அறிவிக்கும் ஹதீஃத் ஏற்றுக் கொள்வதில் ஹதீள்த் கலை
அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனார்.
- இப்னு அம்மார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
3- قال زكريا بن عدي عن ابن المبارك سماك ضعيف فى الحديث
3. சிமாக் பலவீனமானவர்.
- அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி
4- قال صالح جزرة يضعف
4. சிமாக் பலவீனமுள்ளவர்.
- ஸாலிஹ் ஜஸ்ரா ரஹ்மத்துல்லாஹி அலைஹி
5- قال ابن خراش فى حديثه لين
5. சிமாக் ஹதீஃதில் பலவீனமுண்டு.
- இப்னு ஃகர்ராஷ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
6- قال ابن حبان فى الثقات يخطئ كثيرا
6. ஹதீஃத் அறிவிப்பதில் சிமாக் அதிகம் தவறு செய்வார்.
- இப்னு ஹிப்பான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
7- قال جرير بن عبد الحميد اتيته فرأته يبول قائما فرجعت ولم اسأله عن شيئ
7. நான் சிமாகிடம் வரும் போது அவர் நின்ற வண்ணம் சிறுநீர்
கழிப்பதைப் பார்த்தேன்.அவரிடம் எதுவும் கேட்காமல்
திரும்பிவிட்டேன்.
ஜரீர் இப்னு அப்தில் ஹமீத் ரஹ்மத்துல்லாஹி
அலைஹி
8- كان شعبة يضعف
8. சிமாக் பலவீனமானவர்.
- ஷுஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி
9- كان الثوري يضعف بعض الضعف
9. சிமாக் சிறிது பலவீனமுள்ளவர்.
- சுஃப்யான் தவ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி
تهذيب التهذيب لابن حجر العسقلاني : 204,205/ 4
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் 4-(204,205)
ஆசிரியர்- இப்னு ஹஜர் அஸ்கலானீ ரஹ்மத்துல்லாஹி
அலைஹி
இமாம் தகபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குரிய
மீஜானுல் இஃதிதால் எனும் நூலில் கீழ்க்காணும் செய்திகள்
இடம் பெற்றுள்ளன.
قال النسائي اذا انفرد باصل لم يكن حجة
சிமாக் தனித்து அறிவிக்கும் ஹதீஃத் சான்றாக அமையாது.
قال عبد الله بن احمد بن حنبل قرأت بخط ابي عن رجل لم يسمه قال: كان سماك بن حرب فصيحا يزيد الحديث بمنطقه وفصاحته
சிமாக் இலக்கிய நயத்தோடு பேசுபவர். தனது பேச்சாற்றல்
மற்றும் இலக்கியப் புலமையின் மூலம் ஹதீஃதை அழகு
படுத்தும் வழமையுள்ளவர்.
அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
பாகம்-2                                                                 பக்கம்-232
ஹதீஃத் கலை அறிஞர்களில் பலர் சிமாகை குறைகண்டு
இருக்க ஓரிரு அறிஞர்களின் கருத்தை மட்டுமே எடுத்துக்
கொண்டு அரபி ஞானம் தெரியாத அப்பாவி இளைஞர்களை
ஏமாற்றி நெஞ்சின் மீது கைகட்ட வைத்து அவர்களின் வணக்க
வழிபாடுகளை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் வஹ்ஹாபிச
முல்லாக்கள்.
அப்பாவி இளைஞர்களே! ஆதாரபூர்வமான ஹதீள்தை
மட்டுமே பின்பற்றுவோம் என்பதில் நீங்கள் உறுதியாக
இருந்தால் இப்போதிலிருந்து தொழுகையில் நெஞ்சின் மேலே
கைகட்டுவதை விட்டுவிடுங்கள்! ஏனென்றால்,சிமாக்
இடம்பெறும் ஹதீஃத் பக்கா பலவீனமான ஹதீஃத்.
வஹ்ஹாபிய புரோகிதர்களையே பின்பற்றுவோம் என்ற
நிலையிலிருந்தால் மறுமை வாழ்வு என்னாகும் என்பதை
ஒரு கனம் யோசியுங்கள்!
அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் இடம் பெற்ற ஹதீஃதைப்
பின்பற்றுவதிலிருந்து பின் வாங்கமாட்டோம்,தொழுகையில்
நெஞ்சின் மீது கைகட்டுவதை விடமாட்டோம் என்பதில்
வஹ்ஹாபி இளைஞர்களே! நீங்கள் பிடிவாதமாக இருந்தால்
இன்றிலிருந்து புதிய முறையில் நீங்கள் கைகட்டவேண்டும்.
நெஞ்சின் மீது இருகைகளையும் வைக்கக்கூடாது.ஒரெவொரு
கை மட்டுமே நீங்கள் வைக்கவேண்டும்.காரணம், நெஞ்சின்
மீது கைவைப்பதற்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த அஹ்மதிலே
பதிவுசெய்யப்பட்ட ஹதீஃத்தில் ஒரு கை வைப்பதற்குண்டான
வார்த்தையே இடம்பெற்றுள்ளது. ஹாதிஹீ என்ற
வார்த்தை தான் அது.அதன் பொருள் இந்த(கை) என்பதாகும்.
ஆகவே,நெஞ்சின்மீது வலது கையை மட்டும் வையுங்கள்!
அல்லது இடது கையை மட்டும் வையுங்கள்!
அது எப்படி ஒரு கையை வைப்பது?தொழுகையில் இவ்வாறு
செய்வது அழகிய நடமுறை அல்லவே என நீங்கள் கூறினால்
அந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு நெஞ்சின்மீது கை
கட்டுவதை நிறுத்திவிடுங்கள்! அதுதான் நீங்கள் நியாயவாதி
-கள் என்பதின் அடையாளம்.
அவ்வாறில்லாமல் அந்த ஹதீஃதில் இடம் பெற்ற நெஞ்சின்
மீது என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ஒரு கை
என்பதை விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால்
வஹ்ஹாபி இளைஞர்களே!உங்களின் சுயநலத்திற்காக
ஹதீஃதை சிதைத்த குற்றத்திற்கு உள்ளாகுவீர்கள் என்பதை
மறந்துவிடாதீர்கள்!
நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.
வஸ்ஸலாம் 
K. S. அப்துஸ்ஸலாம் இப்ராஹிம்

சகோதரி மகளை திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்?
ரஷீத்
பதில்
சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளதுசட்டம்தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகுஅவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச்சட்டம்.
வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தைசெயல்படுத்தி விட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.
வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லைமுஹம்மது நபியவர்கள்அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு இதைவெளிப்படையாக மொழிய வேண்டும்.
இதை அவர் செய்துவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார்அவர் இஸ்லாத்தில் இணைவதற்குநாம் கூறிய இந்த விஷயத்தைத் தவிர்த்து வேறு எந்த நிபந்தனையும் இல்லை.
புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக புரிந்திருக்க மாட்டார்கள்உறுதியான நம்பிக்கையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாதுஇந்நிலையில்இருப்பவரிடம் இஸ்லாத்தில் கூடாத எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டுத் தான்இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று கூறினால் இது பெரும் சுமையாக அவருக்குத்தோன்றலாம்இதன் காரணத்தால் அவர் இஸ்லாத்தில் இணைவதைக் கைவிட நினைக்கலாம்.
இந்நிலை ஏற்படாமல் இருக்க அவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்து அவர் இஸ்லாத்தைஏற்ற பிறகு சிறிது காலம் மார்க்க உபதேசங்களைக் கேட்பார்மார்க்கத்தைப் பற்றி தெளிவாகஅறிந்து கொண்ட பின் தானாகவே அவர் இஸ்லாமியச் சட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கி விடுவார்இஸ்லாத்தில் அவருக்குப் பிடிப்பு ஏற்பட்ட பின் அவர் தன்னுடைய சகோதிரியின்மகளை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தலாம்.
எனவே தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைவைதற்கு கலிமாவை மனப்பூர்வமாக மொழிவதைத்தவிர்த்து வேறு எதையும் இஸ்லாம் நிபந்தனையாக்கவில்லை.
முஸ்லிமாகப் பிறந்த பலர் இஸ்லாம் தடுத்துள்ள பல காரியங்களைச் செய்து கொண்டு முஸ்லிம்களாக நீடிக்கிறார்கள். அது போல் இஸ்லாத்தில் இணைபவரிடம் சில தீமைகள் இருக்கலாம். குடிப்பழக்கம், வட்டி, விபச்சாரம் போன்ற தீமைகள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் விட்ட பிறகு தான் இஸ்லாத்தில் சேர வேண்டும் என்று மார்க்கமும் சொல்லவில்லை. நாமும் சொல்லக் கூடாது.
இஸ்லாத்தில் இணைவதன் மூலம் அவர் நிரந்தர நரகத்திற்குச் செல்லாமல் தன்னைக் காத்துக் கொள்வார். நாளடைவில் இஸ்லாமிய அறிவுரைகள் அவரிடம் உள்ள தீய செயல்களை ஒவ்வொன்றாக விட வைத்து விடும்,